சுப்ரமணியபுரம் என்ற காலம் கடந்து பாராட்டும் ஒரு படைப்பை இயக்கியவர் சசிகுமார். பின்பு பசங்க படத்தின் மூலம் தரமான தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.

இதை தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் கலக்கினார். இந்நிலையில் தன் குருநாதர் பாலாவிற்காக தாரை தப்பட்டை படத்தில் நடித்தார்.

இப்படம் விமர்சனங்களால் பாராட்டப்பட்டாலும் சசிகுமாரை ரசிகர்கள் சுந்தர பாண்டியன் ஸ்டைலில் தான் எதிர்ப்பார்க்கிறார்கள், அவர்கள் எண்ணங்களை நிறைவேற்றும் விதமாக இந்த வாரம் பட்டையை கிளப்ப வருகின்றது வெற்றிவேல். அப்படி வாங்க சார். இது தான் உங்கள் ரூட்டு என ரசிகர்களே இப்படத்தின் ட்ரைலரை கண்டு பாராட்டி வருகின்றனர்.