ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் இதன் படப்பிடிப்பு தற்போதுவரை 60% நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை இறுதியில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.