தற்சமயம் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாராவும் வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்துக்கு சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.