விக்ரம் நடிப்பில் நேற்று இருமுகன் படத்தின் டீசர் வெளிவந்தது. இந்த டீசர் 3 லட்சம் ஹிட்ஸை தாண்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

படம் முழுவதும் வெளிநாடுகளில் தான் படமாக்கியுள்ளது தெரிகின்றது, விக்ரம் முதல் காட்சியிலேயே ஒரு மல்யுத்த சண்டை போட்டியில் இருப்பது போல் தெரிகின்றது.

இதை தொடர்ந்து டீசரில் சரியாக 0.29 நொடியில் நயன்தாரா கண்கள் பெரிதாகின்றது, அதேபோல் விக்ரம் கண்கள் 0.36 நொடியில் பெரிதாகின்றது.

மேலும், டீசர் முடியும் போது விக்ரம் முகமூடி போட்டுக்கொண்டு எதையோ ஆராய்ச்சி செய்கிறார். இதன் மூலம் இந்த படமும் ஒரு அறிவியல் சம்மந்தப்பட்ட கதை தான் என கூறப்படுகின்றது.

இருமுகன் படத்தின் மிரட்டும் டீசர் பார்க்க