ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது விஜய்யின் தெறி. தமிழகத்திலும், கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு அபார வரவேற்பு தந்துள்ளனர்.

இதனால் தெறி படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் ரசிகர்கள் கொடுத்த பெரிய வரவேற்புக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். ‘தெறி படம் அனைவருக்கும் பிடித்த படமாக வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு இந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தெறி வெற்றி பிரம்மாண்டமாக கொண்டாடிய விஜய்
தெறி வெற்றி பிரம்மாண்டமாக கொண்டாடிய விஜய்