பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்பில் தயாராகி வருகிறது கபாலி.

அமெரிக்காவில் இந்தப் படத்தின் விற்பனை உரிமை ரூ. 8.5 கோடிக்கும் விலைபோனதாக தாணுவே கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்துக்கான வெளிநாட்டு உரிமை ரூ. 30 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் இந்திய சினிமா வர்த்தகத்தில் இது ஒரு புதிய சாதனை ஆகும்.