தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தன்னுடைய 60வது படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டார். பரதன் இயக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் பூஜை கூட அண்மையில் போடப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஹரிஷ் உத்தமன் கமிட்டாகியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், விஜய் கூட நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், தெறி பட வெற்றியை தொடர்ந்து அவருடன் இணைவது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.