தெறி செங்கல்பட்டு ஏரியாவில் திரையிடாதது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் அண்மையில் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து தாணு பேசியபோது, பன்னீர்செல்வம் வீட்டுத் திருமணத்திற்கு ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை அழைத்திருந்தார். அவர்கள் வராததால் கோபமடைந்து நான் யார் என்று அவர்களுக்குக் காட்டுகிறேன் என்று சவால் விட்டுள்ளார். அதனால் தான் தெறி படத்தை தற்போது தடுத்து நிறுத்தியுள்ளார்.

தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமானால் பன்னீர் செல்வம் லஞ்சமும் கேட்கிறார். கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கிறார். தயாரிப்பாளர்களை, விநியோகஸ்தர்களை மிரட்டுகிறார் என்று கூறினார் தாணு.

Loading...