நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நாசர் தலைமையிலான அணி சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியது. இதில் பல முன்னணி நடிகர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த போட்டிக்கு கூட்டம் வரவில்லை நஷ்டம் என பலரும் கூறினார்கள். ஆனால், சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி ரூ 13 கோடி வரை இந்த போட்டியின் மூலம் கிடைத்து விட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் சன் டிவியே ரூ 9 கோடி வரை கொடுத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இன்னும் சில கோடிகளே கட்டிடம் கட்டுவதற்கு தேவை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.