சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறார். இவரின் ரஜினி முருகன் படம் ரூ 50 கோடி வரை வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது யு-டியூபிலும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறார். இதில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் படத்தின் பாடல்கள், டீசர் தான் 1 கோடி ஹிட்ஸை தாண்டியது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடல் 1 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது. இதற்கு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இருவரும் நன்றி தெரிவித்தனர்.