இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தை திரையிட மறுத்ததால் செங்கல்பட்டு ஏரியா திரையரங்களுக்கு இனிமேல் எந்த படமும் தயாரிப்பாளர்கள் தருவதில்லை என்று நேற்று நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

இந்நிலையில் சசிகுமாரின் வெற்றிவேல்’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’ ஆகிய படங்கள் செங்கல்பட்டு ஏரியாவில் பெருவாரியான திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.