அஜித்தும் தான் வரவில்லை- தெறி பிரச்சனை!

பன்னீர்செல்வம்

இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸ் செய்யாததற்கு அம்மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் அவர்களின் தனிப்பட்ட பகையே காரணம் என்றும் அவருடைய மகன் திருமணத்திற்கு விஜய் வராததால்தான் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் ‘தெறி’ படத்தை திரையிட முடியாமல் சதி செய்ததாகவும் தயாரிப்பாளர் தாணு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குற்றம் சாட்டினார்.

இதற்கு இன்று பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். எனது மகனின் திருமணத்திற்கு அஜித்துக்கும்தான் பத்திரிகை வைத்தேன். அவரும் ஒருசில பணிகள் காரணமாக திருமணத்திற்கு வரவில்லை. அதற்காக ‘வேதாளம்’ படத்தை திரையிடாமலா இருந்தோம். தாணு வேண்டும் என்றே என் மீது வீண்பழி சுமத்துகிறார் என்று பதிலளித்துள்ளார்.

Loading...