இளைய தளபதி விஜய் படங்களுக்கு என மாஸ் ஓப்பனிங் இருக்கும். ஆனால் தெறி எதிர்ப்பார்த்ததை விட பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கிளப் என்று உள்ளது.

இதில் பெரும்பாலும் ஹிந்தி படங்கள், தெலுங்கு நடிகர்கள் படங்களே இடம்பெறும். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மட்டும் இதில் இடம்பெற ஐ படத்தால் விக்ரம் அந்த இடத்திற்கு வந்தார்.

தற்போது இளைய தளபதி விஜய்யும் தெறி படத்தின் மூலம் இந்த 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்து விட்டார். இவை கிட்டத்தட்ட நம்மூர் மதிப்பிற்கு ரூ 6.5 கோடியாம்.