அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பியவர் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அட்லியும் மகேந்திரனும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் மகேந்திரன் அளித்த ஒரு பேட்டியில், ‘நீண்ட இடைவெளிக்கு பின்னர் தான் இயக்கவுள்ள படத்திற்கு அட்லியை வசனம் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். அட்லியின் வசனங்கள் குறைந்த வார்த்தைகளில் அர்த்தம் பொதிந்துள்ளதாக இருந்ததை நானே நேரில் பார்த்து அனுபவித்தேன். இதனால்தான் அவரை எனது அடுத்த படத்திற்கு வசனம் எழுத கேட்டுக்கொண்டேன். அவரும் ஆச்சரியத்துடன் ஒப்புக்கொண்டுள்ளார்’ என்று கூறினார்.

மகேந்திரன் கடைசியாக அரவிந்தசாமி, கெளதமி, ரஞ்சிதா நடித்த ‘சாசனம்’ என்ற படத்தை இயக்கினார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை அட்லியின் துணையுடன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.