த்ரிஷா 11 வருடங்கள் கடந்தும் இன்றும் முன்னணி ஹீரோக்களுடன் தான் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனுஷுடன் கொடி படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் இவரும் அரசியவாதியாக நடிக்கின்றாராம், இதில் இதுவரை இல்லாத ஆக்ரோஷமான த்ரிஷாவை இந்த படத்தில் பார்க்கலாமாம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கிட்டத்தட்ட ஒரு லேடி ரவுடியாகவே நடித்துள்ளாராம். இதை கேள்விப்பட்ட பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இத்தனை நாட்கள் அப்பாவி பெண்ணாக நடித்து வந்த த்ரிஷா அரண்மனை-2, நாயகி தற்போது கொடி என தொடர்ந்து அதிரடி படங்களாக நடித்து வருகிறார்.