இளைய தளபதி விஜய்யின் தெறி பட்டையை கிளப்பி வருகின்றது. அனைத்து இடங்களிலும் வசூலில் சாதனை படைத்து வருவதாக கூறப்படுகின்றது.

மேலும், ஓவர்சீஸில் இதுவரை இல்லாத அளவிற்கு தெறி படத்திற்கு ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ரஜினியின் எந்திரன் படம் தான் இதுநாள் வரை முதலிடத்தில் இருந்தது. இதன் ஓப்பனிங் வசூலை தெறி முறியடித்தது அனைவரும் அறிந்ததே.

தற்போது வந்த தகவலின்படி எந்திரன் மொத்த வசூலையும் தெறி 9 நாட்களில் முறியடித்துவிட்டதாம். எந்திரன் A$360,000 வசூல் செய்ய, தெறி A$ 366,326 வசூல் செய்து இந்த சாதனையை முறியடித்துள்ளது.