ஏப்ரல் 29 திரைக்கு வர இருக்கும் “சாலையோரம்”

சாலையோரம்
சாலையோரம்

Smily Pictures சார்பில் ஏப்ரல் 29 திரைக்கு வர இருக்கும் புதிய படம் சாலையோரம் , தணிக்கைக்குழுவின் பெரும் பாராட்டைப்பெற்று “U” சான்றிதழுடன் தமிழக அரசின் வரி சலுகையையும் இப்படம் பெற்றுள்ளது, கழிவுத்தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையையும், சமூகத்தால் அலட்சியப்படுத்தப்படும் அவர்களின் உயிர்களையும் மையமாகக்கொண்ட திரைப்படம் இது, P.வாசுவிற்கு உதவி இயக்குனராக பணியாற்றிய K.மூர்த்திக்கண்ணன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

பின்னனி இசை மரியா மனோகர், இசை சேதுராம், ஒளிப்பதிவு தினேஷ் நிவாஸ், எடிட்டிங் செல்வராஜா. ராஜ், ஷெரினா ஆகிய புதுமுகங்களுடன் பாண்டியராஜன் வில்லத்தனத்துடனும், சிங்கம்புலி, முத்துக்காளை, மிப்புசாமி ஆகியோரின் காமெடி கலாட்டாகளுடனும், ஏப்ரல் 29 உங்களை சந்திக்க இருக்கிறது சாலையோரம்.

Loading...