அஜித் எப்போதும் தனக்கு தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டார். ஆனால், அவர் துறை சம்மந்தப்பட்டவர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் கூட அவர் கலந்துக்கொள்ளாதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இதற்கு எஸ்.வி.சேகர் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார். அஜித் எந்த இடத்திலும் போட்டியை புறக்கணியுங்கள் என்று கூறவே இல்லை, அவரை பற்றி எங்களுக்கு தெரியும் என்று கூறி முற்று புள்ளி வைத்து விட்டார். மேலும், நீங்களாகவே சண்டையை உருவாக்காதீர்கள் எனவும் கூறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது சில வாட்ஸ் குரூப்புகளில் “நடிகர் சங்க போட்டிக்கு, அஜித்தால் மக்கள் கூட்டம் குறையவில்லை, வெயில் காரணமாக தான் மக்கள் வரவில்லை. அஜித் உங்களை பெரிய ஆளாக நினைத்துக்கொள்ள வேண்டாம்” என்பது போல் ஒரு செய்தி பரவுகின்றது.

முடிந்து போன விஷயத்தை யாரோ தன் சுயலாபத்திற்காக மீண்டும் தூண்டிவிடுகின்றனர் என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது. அதை விட இதுக்குறித்து வரும் சில வீடியோ விமர்சனங்கள் வேறு, உச்சக்கட்ட கொடுமை.