இந்திய சினிமாவின் வர்த்தகம் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஆனால், ஹாலிவுட் படங்களின் வியாபாரம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ஜங்கிள் புக் படம் இந்தியாவில் ரூ 145 கோடி வசூல் செய்து இன்னும் வெற்றி நடைப்போடுகின்றதாம்.

இப்படம் கண்டிப்பாக ரூ 160 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதுநாள் வரை விஜய், அஜித் படங்களே இந்தியாவில் இத்தனை வசூலை தொட்டது இல்லை, இனி தொடுவதும் அரிது தான்.

ஜங்கிள் புக் படத்தில் நடித்த நீல் இந்திய வம்சாவளியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.