தனி ஒருவன் வில்லனின் புதிய அவதாரம் !

அரவிந்த்சாமி
அரவிந்த்சாமி

‘கடல்’ படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு ரீ-என்ட்ரி ஆகி, ‘தனிஒருவன்’ படத்தின் மூலம் மீண்டும் பிரபலமானார் அரவிந்த்சாமி. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

தற்போது ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து ‘போகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியில் ‘டியர் டாட்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு தற்போது இயக்குனராகும் ஆசை துளிர் விட்டிருக்கிறது. தான் இரண்டு கதைகள் உருவாக்கி வைத்திருப்பதாகவும், அவற்றில் ஒன்றை விரைவில் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் அல்லது இந்தி என ஏதாவது ஒரு மொழியில் படமாக்குவார் என்று தெரிய வருகிறது.

Loading...