ஐ படப்பிடிப்பு முடிந்தது.. கேக் வெட்டி கொண்டாடினார் ஷங்கர்!

இரண்டு ஆண்டுகள் நடந்த ஐ படத்தின் படப்பிடிப்பை நேற்று கேக் வெட்டிக் கொண்டாடினார் இயக்குநர் ஷங்கர். விக்ரம் – எமி ஜாக்ஸன் நடிக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் 150 கோடியில் தயாரித்துள்ள பிரமாண்ட படம் ஐ. இதன் இசை வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வந்திருந்தார். ரஜினிகாந்த் வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சீனா உள்ளிட்ட நாடுகளில் இரண்டு ஆண்டு காலம் நடந்தது. சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளிலும் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்புக்குப் பின் நடக்கும் பணிகளில் பெருமளவு நிறைவு பெற்றுள்ளது. இப்போது ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசையமைப்பு வேலைகளில் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. சம்பள பிரச்சினை காரணமாக எமி ஜாக்ஸன் பங்கேற்காததால் அந்தப் பாடல் காட்சி படமாக்கப்படாமல் இருந்தது.

சமீபத்தில் அந்தப் பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் வைத்து படமாக்கினர்.

படப்பிடிப்பு முழுவதும் நேற்று முறைப்படி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து ஹயாத் ஓட்டலில் பெரிய கேக் வெட்டி கொண்டாடினர். இதில் நாயகன் விக்ரம், நாயகி எமி ஜாக்ஸன் உள்பட பலரும் பங்கேற்றனர். இயக்குநர் ஷங்கருக்கு கேக் ஊட்டினர்.

Loading...