ப்ரியா ஆனந்த் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் தணிக்கைக் குழுவில் யு சான்று பெற்றுள்ளது. கண்ணன் இயக்கத்தில், ப்ரியா ஆனந்த், விமல், சூரி நடித்துள்ள படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. நடிகை விசாகா ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை காந்தி பிறந்த நாளையொட்டி வெளியாகவிருக்கிறது. நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர், தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழுவில் அனைத்து தரப்பும் பார்க்கக் கூடிய படம் எனும் வகையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எந்த காட்சியையும் தணிக்கைக் குழு ஆட்சேபிக்கவில்லை. 200-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.

Oru-Oorla-Rendu-Raja-