தனக்கு கோவில் எல்லாம் கட்ட வேண்டாம் என்று நயன்தாரா ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளாராம். செகண்ட் இன்னிங்ஸில் நயன்தாராவின் கெரியர் சூப்பராக செல்கிறது. தெலுங்கில் ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டாலும் தமிழில் கை நிறைய படங்கள் உள்ளன. இளம் ஹீரோக்கள் என்னவென்றால் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க போட்டி போடுகிறார்கள். இதனால் நயன் படம் ஒன்றுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

முன்னணி நடிகையாக உள்ள நயன்தாராவுக்கு கோவில் கட்டி அழகு பார்க்க அவரது ரசிகர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

தனக்கு யாரும் கோவில் கட்ட வேண்டாம் என்று நயன்தாரா ரசிகர்களை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

சிம்புவுடன் இது நம்ம ஆளு, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், உதயநிதி ஸ்டாலினும் நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.