லிங்காவில் ரஜினியுடன் நடித்தது ஜீவா, ஆர்யா போன்ற இளம் நடிகர்களுடன் நடித்ததைப் போன்ற உணர்வைத் தந்தது என நடிகர் சந்தானம் கூறினார். ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் சந்தானம், கருணாகரன் ஆகிய இரு காமெடி நடிகர்கள் நடிக்கின்றனர். ரஜினிக்கு இப்படத்தில் இரட்டை வேடம் என்பதால் இருவரும், ஒவ்வொரு ரஜினியுடன் நடிக்கின்றனர்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் வேட்டி சட்டை அணிந்து வரும் ரஜினியுடன் கருணாகரன் நடிக்கிறார். இந்த ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா வருகிறார்.

இள வயது ரஜினியுடன் காமெடி கேரக்டரில் சந்தானம் நடிக்கிறார். இளம் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மாடர்ன் ரஜினி வேடம் இளமையாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. ஜீன்ஸ் பேன்ட் கூலிங் கிளாஸ் கலைத்து போட்ட தலைமுடி என செம ஸ்டைலாக வருகிறார்.

ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி சந்தானம் கூறுகையில், “ரஜினி நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். படப்பிடிப்பில் எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்தது. ரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

இளம் ஹீரோக்கள் ஆர்யா, ஜீவா உள்ளிட்ட பலருடன் நான் நடித்துள்ளேன். அவர்களுடன் நடிக்கும் போது என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வுதான் ரஜினியுடன் நடிக்கும் போதும் எனக்கு இருந்தது,” என்றார்.

Loading...