அப்பா சொன்னபடி அன்று நான் கற்றவை இப்போது என் சினிமா கேரியருக்கு உதவுகின்றன என்றார் ஸ்ருதி ஹாஸன். நடிப்பு, பாடல், நடனம், இசை என அனைத்திலும் தேர்ந்த கலைஞர் ஸ்ருதிஹாஸன். இவை அவருக்கு அத்தனை சுலபத்தில் வாய்க்கவில்லை. அனைத்துமே அவர் இளம் வயதில் கற்றவை. இப்போது இவற்றில் எது, எப்படி கை கொடுக்கிறது?

ஸ்ருதி ஹாஸன் சொல்கிறார்… “இதுதான் பிடிக்கும் என்று குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. சிறுவயதில் எனக்கு பிடித்தமானவை எல்லாவற்றையும் கற்றேன்.

shruti-haasan_1

என் தந்தை கமல் என்னிடம் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார். அதாவது இப்போது நீ கொடுக்கும் உழைப்பு வருங்காலத்தில் வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயத்தில் உபயோகப்படும் என்றார். அவர் கூறிய அறிவுரை இன்று பலித்து விட்டது.

நான் கற்றவை சினிமாவில் இப்போது பிரதிபலிக்கிறது. அமெரிக்கா சென்று இசை பயின்றபோது சினிமாவில் அது பயன்படும் என்று நினைக்கவில்லை. ஆனால் இப்போது எனக்கு பல விஷயங்களில் அது பயன்படுகிறது.

அப்பா கமலுடன் ஒரு படத்தில் நடிக்க மாட்டீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். எனக்கும் ஆசைதான். ஆனால் சரியான படம் அமையவில்லை,” என்றார்.

Loading...