ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே, பத்மாலட்சுமியின் ஆறு மாத ரொமான்ஸ் முடிவுக்கு வந்து விட்டதாம். இருவரும் ஆளுக்கு ஒரு பாதையில் கிளம்பி விட்டார்களாம். கடந்த ஆறு மாதமாக இருவரும் படு மும்முரமாக, தீவிரமாக “காதலித்து” வந்தனர். இப்போது இந்த காதலை முடித்து வி்ட்டாராம் பத்மா. பேஜ் சிக்ஸ் என்ற இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

44 வயதான மாடல் மற்றும தொலைக்காட்சி காம்பியரான பத்மா லட்சுமியின் ரொமான்ஸ் கதை ரொம்பவே நீளமானது. லேட்டஸ்டாக அவர் கெரேவைக் காதலித்து வந்தார். ஆனால் இந்தக் காதலுக்கு அவர் குட்பைசொல்லி விட்டாராம். காரணம் தெரியவில்லை.

தான் சிங்கிளாக இருப்பதாக இப்போது கூறியுள்ளார் பத்மா. இருவரும் நல்ல நண்பர்களாக இருக்க முடிவு செய்து பிரிந்து விட்டார்களாம். கெரேவுக்கு 65 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மாவின் அதிகாரப்பூர்வ கணவர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஆவார். இவரை 2004ம் ஆண்டு திருமணம் செய்த பத்மா, பின்னர் 2007ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார்.

அதன் பின்னர் அவரது காதல் லீலைகள் விஸ்வரூபம் எடுத்தன. இளவரசி டயானாவின் முன்னாள் காதலரான பைனான்ஷியர் தியோடர் டெட்டி போர்ட்ஸ்மேனுடன் டேட்டிங் போயுள்ளார். அவர் மூலம் கிருஷ்ணா என்ற மகளையும் பெற்றுக் கொண்டார்.

2011ம் ஆண்டு தியோடர் மரணமடைந்தார். அவரது சொத்திலிருந்து பெரும் பகுதி பத்மாவுக்குக் கிடைத்தது.

அதன் பின்னர்தான் அவர் கெரேவுடன் பழக ஆரம்பித்தார். இப்போது அதுவும் புளித்துப் போய் விட்டது.

Loading...