வசந்த பாலன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ‘காவியத் தலைவன்’ படம் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாகவிருந்த படம் இது. ஆனால், ஒருசில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது. படம் வெளியாகும் தேதி உறுதியான நிலையில், இப்படத்தின் டிரைலரை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே, இப்படத்தின் டீசரும், பாடல்களும் வெளியாகிவிட்டன.

20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சினிமா, நாடக நடிகர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இப்படத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சித்தார்த் இந்த படத்தில் தலைவன்கோட்டை காளியப்ப பாகவதர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரித்விராஜ் மேலச்சிவல்பெரி கோமதி நாயகம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை வருகிற நவம்பர் மாதம் 7-ந் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அன்றைய தேதியில், விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படமும் வெளியாகவிருக்கிறது.