கத்தி பிரச்சனை தீர்க்க விஜய் தானாக வந்து பேச வேண்டும் என திரையுலகினர் எதிர்பார்க்கிறார்கள்.

கத்தி பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று இளையதளபதி விஜய் அறிக்கை விட்டுள்ளார். ஆனால் படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளோ பிரச்சனை தீரவில்லை, படத்தை வெளியிட விட மாட்டோம் என்கின்றன.

இந்நிலையில் இது குறித்து திரையுலகினர் கூறுகையில்,

விஜய் தான் பேச வேண்டும். இது அவருடைய படம். அவர் முன்வந்து பேசி ஒரு நிலையை எடுக்க வேண்டும். ஆனால் அவரோ பிறர் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறார் என்றனர்.

விஸ்வரூபம் படத்திற்கு எதிராக பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தபோது கமல் ஹாஸன் துணிச்சலாக பேசினார், அவருக்கு திரை உலகினரும் தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தற்போது விஜய்யும் அது போன்று பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.