கத்தி பிரச்சனை ஒருவழியாக தீர்வுக்கு வந்தது. படம் அறிவித்தபடியே நாளை தமிழகத்தில் ரிலீஸாகிறது.

கத்தி படத்திற்கு அதன் தயாரிப்பாளர் லைக்காவால் தான் பிரச்சனை ஏற்பட்டது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என சில தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நின்றன. இந்நிலையில் படம் நாளை ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த பரப்பான சூழலில் இன்று காலை தியேட்டர் உரிமையாளர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. படத்தின் விளம்பரம் உள்பட அனைத்தில் இருந்தும் லைக்கா பெயரை நீக்க சம்மதித்து அந்நிறுவனம் கடிதம் அளித்துள்ளது.

இதையடுத்து கத்தி படம் அறிவித்தபடி நாளை தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கத்தி தமிழகத்தில் மட்டும் மொத்தம் 440 தியேட்டர்களில் நாளை ரிலீஸாகிறது.

Kaththi