கத்தி படத்தின் வெற்றி குறித்த செய்தியாளர் சந்திப்புக்காக வந்த விஜய், பத்திரிகையாளர்களை வரவேற்று, அவர்களோடு போட்டோ எடுத்துக் கொண்டதோடு புறப்பட்டுப் போய்விட்டார். படம் குறித்து எதுவும் பேசவில்லை. தீபாவளிக்கு வெளியான கத்தி படம் பெரும் வெற்றி பெற்றதாகக் கூறி, தமிழகத்தின் ஒவ்வொரு நகரந்தோறும் ரசிகர்களைச் சந்தித்து வந்தார் விஜய்.

படத்தின் வெற்றியைப் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாகக் கூறி, நேற்று மாலை விஜய் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

வேளச்சேரியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சந்திப்புக்காக வந்த செய்தியாளர்களை கைகுலுக்கி வரவேற்ற விஜய், பின்னர் அவர்களுடன் தனித்தனியாகப் படமெடுத்துக் கொண்டார். பின்னர், வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பிவிட்டார். படம் குறித்தோ, அதன் வெற்றி குறித்தோ, வசூல், அடுத்த படம் என எதைப் பற்றியும் அவர் பேசவில்லை.

அரை மணி நேரத்தில் இந்தச் சந்திப்பு முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Loading...