கத்தி படத்தின் வெற்றி களைப்பில் இருக்கும் விஜய் அடுத்த சிம்பு தேவன் படத்தில் நடிக்க உள்ளார் என்பது எல்லாருக்கும் தெரியும்.அதன் பிறகு அவர் அட்லியுடன் இணைய போகும் ப்ராஜெக்ட் கிட்டத்தட்ட உறுதியானது என நம்பக தகவல் கிடைத்துள்ளது மிக பிரம்மாண்ட பொருட்செலவில் ஆக்ஷன் பிளஸ் ரொமாண்டிக் படமாக உருவாக உள்ளதாம்.

அதனால் இப்படத்துக்காக முன்று மாபெரும் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கூடுகிறது. நமக்கு கிடைத்த தகவல்படி கலைபுலி. எஸ் தாணு, தி நெக்ஸ்ட் பிக் ரிலீஸ் மற்றும் மகேந்திரன் ஆகியோர் சேர்ந்து தயாரிக்க உள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஜி .வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜி.விக்கு இப்படம் 50வது படமாக அமைகிறது.

atlee_vijay001