யான் படத்திற்குப் பிறகு ஜீவா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் படம் இது. முதல் படத்தை காமெடிப் படமாக எடுத்தவர், அடுத்த படத்தை காதல் படமாக உருவாக்கப் போகிறாராம்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன.

இதற்குமுன் ஜீவாவுடன் நயன்தாரா ‘ஈ’ படத்தில் நடித்திருந்தார். எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜீவா, நயன்தாரா இருவருமே சிறப்பாக நடித்திருந்தனர்.

அப்படத்திற்குப் பிறகு ஆர்யா-நயன்தாரா ஜோடியாக நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜீவா சிறப்புத் தோற்றத்தில், நயன்தாராவின் மாப்பிள்ளையாக நடித்திருந்தார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள். இப்படம் காமெடி கலந்த ரொமன்டிக் படமாக உருவாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. இதில் ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் வந்ததைப் போல சாதாரண சென்னை இளைஞனாக நடிக்கிறார் ஜீவா.

Loading...