மாஸ் படத்தில் எமி ஜாக்சன் நடிப்பாரா? இல்லையா?

Amy Jackson
Amy Jackson

அஞ்சான் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகிகளாக நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.இதுவரை சூர்யா, நயன்தாரா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து எமி ஜாக்சன் விலகியுள்ளதாக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது. இதுகுறித்து மாஸ் படக்குழுவினரை கேட்ட போது, எமி ஜாக்ஸன் மாஸ் படத்திலிருந்து வெளியேறவில்லை எனவும், அந்த கேரக்டரில் கண்டிப்பாக அவர்தான் நடிக்கவிருக்கிறார் எனவும் கூறினர்.

இதனிடையில் லண்டனில் இருந்து சென்னைக்கு வந்திருப்பதாக எமி ஜாக்சன் நேற்று ட்வீட் செய்திருந்தார்.

Loading...