தல ரசிகர்கள் கடந்த வாரம் முழுவதும் செம்ம குஷியில் மிதந்தனர். என்னை அறிந்தால் படத்தின் விதவிதமான போஸ்டர் மற்றும் நீண்ட நாள் பிறகு வெளியான படத்தின் தலைப்பு என்று போன வாரம் படத்தை பற்றி முக்கியமான விஷயங்களை என்ன அறிந்தால் டீம் வெளியிட்டனர்.

இந்நிலையில் படத்தை வேகமாக முடித்து கிறிஸ்துமஸ் அல்லது ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு கடுமையாக உழைத்து வருகிறது படக்குழு.

என்னை அறிந்தால் படத்தின் டீசர் நவம்பர் 25ம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. படத்தின் பாடல் வெளியிடு டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு விழாவாக நடத்தலாமா என்று கௌதம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் யோசித்து வருகிறது .

ஆனால் பாடல் வெளியிடுக்கு தல தரிசனம் கொடுக்க மாட்டார் என்றவுடன் பல யோசனைக்கு பிறகு ஏதாவது ஒரு எஃப்.எம். ஸ்டேஷனில் வைத்து விடலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு கௌதம் மற்றும் ஹாரிஸ் கூட்டணியில் பாடல் உருவாகியுள்ளதால் மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.