உலக சினிமா ரசிகர்களையே தன் அழகால் மயக்கியவர் ஏஞ்சலீனா ஜுலி. இவர் நடித்த டாம் ரைடர், சால்ட், வாண்டட் போன்ற படங்கள் இன்றளவும் அனைவராலும் விரும்பப்படுபவை.இவர் நீண்ட நாட்களாக ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் கெட் டு கெதர் பாணியில் வாழ்ந்து, சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஒரு பேட்டியில் ’நான் எதிர்காலத்தில் அரசியலில் இணைந்து மக்களுக்காக பணியாற்றும் திட்டத்தில் உள்ளேன் என்றும் ஆனாலும், இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க விரும்புகிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.