மாஸ் படத்திலிருந்து எமி ஜாக்ஸன் விலகிவிட்டார் என்று செய்தியை பொய்யாக்கும் வகையில், நேற்று அப்படத்தின் போட்டோஷூட்டில் பங்கேற்றார் எமி ஜாக்ஸன். சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவும், எமி ஜாக்சனும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. சூர்யாவின் வித்தியாசமான கெட்டப்பும் வெளியானது.

இந்நிலையில், படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் எமி ஜாக்சன் படத்திலிருந்து இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எமிஜாக்சன் நேற்று சென்னை வந்து இப்படத்துக்கான போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டுள்ளார். இதனை படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

‘மாஸ்’ படம் திகில் நிறைந்த காமெடிப் படமாக உருவாகி வருகிறது. ஜெயராம், பார்த்திபன், பிரேம்ஜி அமரன், ஸ்ரீமன், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

amy_1