விஜய்யை வைத்து தான் இயக்க ஆரம்பித்துள்ள பெயரிடப்படாத புதிய படத்தின் கதை எதனுடைய தழுவலும் இல்லை என்றும், தானே எழுதிய சொந்தக் கதைதான் என்றும் நடிகர் விஜய்க்கு உறுதியளித்துள்ளார் இயக்குநர் சிம்பு தேவன். விஜய்யின் படங்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றன.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கத்தி, தயாரிப்பு, கதை, காட்சியமைப்பு என பல வகையிலும் பிரச்சினைக்குள்ளானது. குறிப்பாக படத்தின் கதைக்கு மீஞ்சூர் கோபி சொந்தம் கொண்டாடினார். இது விஜய்யை சங்கடத்துக்குள்ளாக்கியது.

எனவே தனது அடுத்த படத்தின் கதை எந்த வகையிலும் அடுத்தவர் உரிமை கொண்டாடாத அளவுக்கு சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

சிம்பு தேவன் கதை மற்றும் காட்சிகளைச் சொன்னபோது, கதை உங்களுடையதுதானே.. எந்த பாதிப்பிலும் உருவாக்கப்பட்டதில்லை அல்லவா என கேட்டாராம் விஜய்.

இதுகுறித்து ஏற்கெனவே நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இயக்குநருக்கு இந்த கேள்விகள் சங்கடத்தை உண்டாக்கினாலும், விஜய் கேட்டதிலிருந்த நியாயம் புரிந்ததால், இது எனது சொந்தக் கதைதான் சார் என படப்பிடிப்புக்குப் போகும் முன் உறுதி தந்தாராம்.

vijay58

Loading...