ரஜினியிடம் மன்னிப்பு கேட்ட மிக பெரிய பிரபலம் !

சூப்பர் ஸ்டார் நடிப்பில் லிங்கா திரைப்படம் வருகிற டிசம்பர் 12ம் தேதி அவரது பிறந்த நாள் அன்று வெளி வருகிறது. இந்நிலையில் நேற்று தொடங்கிய கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் பங்கேற்றனர். இந்த விழாவில் ரஜினிக்கு நூற்றாண்டு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் குறிப்பிட தக்க விஷயம் ஒன்று நடந்தது .

அதாவது விருது வழங்கும் முன்னர் புதிதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மனோகர் பரிக்கர் பேசினார்.

அவர் தனது பேச்சில் கோவா ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், அமிதாப் பச்சன் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டவர், விழாவின் நாயகனான ரஜினி பெயரை மறந்துவிட்டார்சிறிது நேரம் அங்கு இருந்து சில பேர் ரஜினி பெயரை கோஷம் எழுப்ப அதன் பின்னர் இதை உணர்ந்த அவர், “ரஜினிகாந்த் பெயரைக் குறிப்பிடாததற்கு மன்னிக்க வேண்டும்.

நான் பெயர்களை ஒரு தாளில் எழுதி வைத்திருந்தேன். அதை எடுத்து வர மறந்துவிட்டேன்,” என்று சொல்லி சமாளித்தார் .

இதை தனது ஸ்டைலிலே சிறு புன்னகையோடு கவனித்து கொண்டு இருந்தார் சூப்பர் ஸ்டார்.

Loading...