வலியவன் ஆண்ட்ரியாவுக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது. பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஆண்ட்ரியா. அதற்கு முன்பு அவர் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு காட்சியில் கூட்டத்தோடு கூட்டமாக வந்துவிட்டு சென்றார்.

அதனால் அதை விட்டுவிடலாம். ஆண்ட்ரியா கமல் ஹாஸன் உள்பட பல நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் அவருக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான் அவர் எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணனின் வலியவன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய் ஹீரோவாக நடிக்கும் வலியவன் மென்மையான காதல் கதை படமாம்.

அதற்காக ஆக்ஷன் இருக்காது என்று நினைக்க வேண்டாம். படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்றுள்ளது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். ஒரு பாடல் காட்சியும், கிளைமாக்ஸும் தான் பாக்கியாம். பாடல் காட்சியை குளு மணாலியிலும், கிளைமாக்ஸ் காட்சியை ஹரித்வாரிலும் படமாக்குகிறார்கள்.

இந்த படம் ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் திருப்புமுனைாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு டி.இமான் தீயா இசையமைத்துள்ளார்.

வலியவனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் திரையிட திட்டமாம்.