சம்பள விஷயத்தில் நான் நெருக்கடி தருவதில்லை. ஆனால் சில தயாரிப்பாளர்கள் பேசின சம்பளத்தைக் கூட தருவதில்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார் ஸ்ருதிஹாஸன்.

தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ்பாபு என முதல் நிலை நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார். கையில் ஏகப்பட்ட படங்கள் இருப்பதால், புதிய படங்களில் ஒப்பந்தமாக அதிக சம்பளம் கேட்பதாக ஸ்ருதிஹாசன் மீது புகார் கூறப்பட்டது.

ஆனால் இதனை மறுத்துள்ளார் ஸ்ருதி. அவர் கூறுகையில்,

“சம்பள விஷயத்தில் நான் இதுவரை எந்தத் தயாரிப்பாளருக்கும் நிர்ப்பந்தம் கொடுத்ததில்லை. என் திறமை, உழைப்புக்கேற்பத்தான் நான் சம்பளம் பெறுகிறேன்.

இன்னும் சொல்லப்போனால் சில தயாரிப்பாளர்கள் எனக்கு தருவதாக ஒப்புக் கொண்ட சம்பளத்தை கூட தராமல் பாக்கி வைத்துள்ளனர். மகேஷ்பாபு தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார்.

அவருடன் நடிப்பதற்கு நான் கேட்கும் சம்பளத்தை அந்தத் தயாரிப்பாளர் தர தயாராக இல்லை. எனவே நான் பின்வாங்க வேண்டியுள்ளது. இதனை மனதில் வைத்து எனக்கு எதிராக செய்தி பரப்புகிறார்கள்,” என்றார்.

shruti-haasan_2