விஜய் சேதுபதி தன் அடுத்த சொந்தத் தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்று பெயரிடப்பட்டுள்ளார். இசை.. வேறு யார்… அந்த மேற்குத் தொடர்ச்சி மலை தந்த இசைஞானி இளையராஜாதான்!

‘புறம்போக்கு’, ‘நானும் ரவுடிதான்’ உள்ளிட்ட பணிகளில் பிஸியாக இருந்தாலும், ‘ஆரஞ்சு மிட்டாய்’ எனும் படத்தில் நடித்து, தயாரித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை பிஜு விஸ்வநாத் இயக்கியுள்ளார்.

அப்படத்தின் இறுதிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து இசை வெளியீடு நடைபெற இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ‘மேற்கு தொடர்ச்சி மலை’ எனும் படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி.

இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய லெனின் பாரதி, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இளையராஜா இசையமைக்க, காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்கிறார்.

டிசம்பர் 2ம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது!