பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை அங்கையாத் தேவர் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

சென்னையில் தங்கியிருந்த அங்கையாத் தேவர், அவ்வப்போது அகதிகள் முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்.

இன்று காலை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் காலை உணவு சாப்பிட்டுப் படுத்தவர், உறக்கத்திலேயே உயிர் பிரிந்துவிட்டது.

விவேக்கின் தந்தை உடல் அவர்களின் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி மரியாதை செய்யப்படுகிறது.

அங்கையாத் தேவருக்கு விவேக் தவிர, மேலும் ஒரு மகள் உள்ளார். அங்கையாத் தேவரின் மனைவி கோவில்பட்டியில் வசிக்கிறார்.

நாளை விவேக் தந்தையின் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. நடிகர் விவேக் தன் தந்தையின் உடலுடன் கோவில்பட்டி செல்கிறார்.