ரஜினியின் லிங்கா படம் நேற்று சென்சார் ஆனது. எந்த காட்சியும் நீக்கப்படாமல் சுத்தமான யு சான்று கிடைத்துள்ளது படத்துக்கு. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இருவேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி, அனுஷ்கா நடித்துள்ள லிங்கா படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தை நேற்று சென்சாருக்கு அனுப்பினர். படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தின் எந்தக் காட்சிக்கும் ஆட்சேபம் தெரிவிக்காமல் யு சான்றளித்தனர்.

இந்தப் படம் 2 மணி 54 நிமிடங்கள் ஓடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது கிட்டத்தட்ட படையப்பா படத்துக்கு சமமான நீளம் என்பது குறிப்பிடத்தக்கது. லிங்காவுக்கு சென்சார் சான்று கிடைத்துவிட்டதால், ரஜினி பிறந்த நாளன்று படம் வெளியாவது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.