விஜய்யின் அடுத்த படத்துக்கு ரஷ்யா போய் ட்யூன் போடப் போகிறாராம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்.

தலைவா படத்துக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இது விஜய்ய்யின் 59வது படமாகும். ஜிவி பிரகாஷுக்கு 50 வது படம். அட்லீ இயக்குகிறார்.

எனவே மிகுந்த சிரத்தையெடுத்து இசையமைக்கப் போகிறாராம். இந்தப் படத்துக்கான ட்யூன்களை ரஷ்யாவின் பிரேக் பகுதிக்குப் போய் தங்கி இசையமைக்கப் போகிறாராம் ஜிவி. இந்தத் தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில்தான் ஒரு விளம்பரப் படத்துக்காக சிம்பொனி இசையமைக்க ஜெர்மனிக்குப் போய் வந்தார் ஜிவி என்பது குறிப்பிடத்தக்கது.