ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது இளைய தளபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் ஆந்திர சினிமாவில் சில நாட்களாகவே ஒரு வதந்தி பரவி வருகிறது.

இதில் மகேஷ் பாபுவிற்கு, ஸ்ருதிக்கும் சண்டை, அதனால் தான் தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் படத்தில் இருந்து விலகினார் என்று.ஆனால், இப்படத்தின் இயக்குனர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, தற்போதும் என் படத்தில் ஸ்ருதி நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதுக்குறித்து ஸ்ருதி தரப்பில் ‘ஸ்ருதி முன்னணி நடிகையாக வளர்ந்து வருவது யாருக்கோ பிடிக்கவில்லை, அதிலும் விஜய், மகேஷ் பாபு போன்ற உச்ச நடிகருடன் நடிப்பதை அறிந்து இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர் என்று கூறியுள்ளனர்.

Shruti_Haasan_1