வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக இமான் இசையில் குத்துப்பாடல் பாடிய சிவகார்த்திக்கேயன், காக்கிச்சட்டை படத்தில் ஸ்டைலிசான ரொமான்ஸ் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளாராம்.

இப்போதெல்லாம் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாடுவது பேஷனாகி வருகிறது. கமல், ரஜினி, விஜய், சிம்பு, சூர்யா, தனுஷ் என நடிகர்கள் பாடகர்களாக மாறியுள்ளனர். இதில் சில பாடல்கள் ஹிட் ஆகிவிடுகின்றன. அந்த வரிசையில் சிவகார்த்திக்கேயனும் இணைந்து விட்டார்.

நடிகர் சிவகார்த்திக்கேயன் முதன் முறையாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன்முறையாக பெண்கள், குழந்தைகளை எச்சரித்துவிட்டு பாடலை பாடினார். அந்த குத்துப்பாடல் செம ஹிட் அடித்தது.

இதனைத் தொடர்ந்து காக்கிச்சட்டையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் ‘ ஐ யம் சோ கூல்’ என்னும் பாடலைப் பாடியுள்ளார்.10-1418195138-kakki-sattai--11-600

இதற்கு முன் அனிருத் இசையில், ‘மான் கராத்தே’ படத்தில் ‘ராயபுரம் பீட்டரு’ பாடலை பாடியுள்ளார் சிவகார்த்திகேயன். ஐயம் சோ கூல் பாடல் காச்கிச்சட்டையின் மிகச்சிறந்த ரொமான்ஸ் பாடலாக இருக்கும் என்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

‘காக்கிச்சட்டை’. படத்தை தனுஷ் தயாரிக்க அதனை எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். ‘எதிர்நீச்சல்’ படத்திற்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் காக்கிச்சட்டையில் இணைந்திருக்கின்றனர்.

காக்கிச்சட்டையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இவரும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் இது. அந்த படம் போலவே இந்தப்படமும் ஹிட் அடிக்கும் என்று ஜோசியம் சொல்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

சிவகார்த்திக்கேயன் பாடிய ஐயம் சோ கூல் பாடலை நார்வேயில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காக்கி சட்டை படத்தின் இசை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி நாளை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தை பொங்கலுக்குப் பிறகு படம் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.