போர்க்குதிரை படத்தில் நடிப்பதற்காக தனக்கு வந்த மற்ற பட வாய்ப்புகளை நிராகரித்து விட்டாராம் நடிகை சாந்தினி.

சித்து பிளஸ் 2 படத்தில் சாந்தனுவின் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. அடுத்து நகுலுடன் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் கதாநாயகியாக ‘போர்க்குதிரை’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீபிரவீன் இயக்கும் சைதன்ய கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாகி நீடு, கவிதா ஸ்ரீநிவாசன், பங்கஜ், சஞ்சய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

10-1418201277-porkuthirai--12-600

இப்படம் 1980ம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற சம்பவத்தை கதைக்களமாகக் கொண்டுள்ளது. அக்கால காதலையும், இந்த மண்ணின் மணத்தையும், குணத்தையும் படம் பிடித்து காட்டுவதாக இப்படம் அமையும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

ஒரு அப்பாவி இளைஞனுக்கும், அராஜக பேர்வழிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தமே போர்க்குதிரை படத்தின் கதைக் கருவாம்.

உசிலம்பட்டியை ஒட்டியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஜீவநாடியே, நாயகி சாந்தினி தானாம். கிராமத்து பிராமண பெண் வேடத்தில் நடித்துள்ளாராம் சாந்தினி.

இப்படத்திற்காக தனக்கு பல படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவ விட்ட சாந்தினி, இப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளதாக இயக்குநர் ஸ்ரீபிரவீன் பாராட்டியுள்ளார்.