விஜய் தற்போது சிம்பு தேவன் படத்தில் நடித்து வருகிறார். என்ன தான் பிஸியாக இருந்தாலும் தன் நண்பர்கள் அழைத்தால் எந்த நேரத்திலும் வருவார்.

அந்த வகையில் ஏ.ஜி.அமித் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ராஜாதந்திரம். இப்படத்தின் 6 டீசர்களை படக்குழு திரை நட்சத்திரங்கள் மூலமாக வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் அதில் ஒரு டீசரை இளைய தளபதி விஜய்யின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளனர். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.