அஜித் படம் வருகிறது என்றாலே தமிழக திரையரங்குகளில் திருவிழா தான். இந்நிலையில் மங்காத்தா படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் ஓவர்சிஸிலும் உயர்ந்து விட்டது.

ஆரம்பம், வீரம் என அடுத்தடுத்த வெற்றி அஜித்தை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது என்னை அறிந்தால் படத்தின் வியாபாரம் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலும் நன்றாக இருக்கிறது.

இதில் அமெரிக்காவில் மட்டும் இப்படம் 95 திரையரங்குகளில் வெளிவருகிறது. அஜித்தின் திரைப்பயணத்தில் இது தான் அங்கு அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகும் படமாம்.

Loading...