தமிழ் சினிமாவிற்கு வாலி, குஷி, நியூ என தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது இயக்கம்+ நடிப்பில் இசை படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இப்படம் குறித்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய், அஜித் குறித்து மனம் திறந்துள்ளார் இவர். இதில் ’விஜய் அவ்ளோ பெரிய ஹீரோ இன்னும் எனக்காக அவர் மனசுல இவ்ளோ பெரிய இடம் கொடுத்திருப்பார்னு நான் நெனைக்கவே இல்ல. இத்தனை வருஷம் கழிச்சு ஒரே வார்த்தைல நான் 10 வருஷம் சினிமாவுல இல்லை என்பதை மக்கள் மறக்குற மாதிரி செய்து விட்டார்.

நான் கடந்து வந்த பாதைக்கு முதல் விதை போட்டவரு அஜித். நல்ல மனுஷன் இப்போ கொஞ்சம் நாளா தன்னை தனிமை படுத்திட்டாரு, அவரு போன் கூட யூஸ் பண்றதில்லை. மெயில் அனுப்பியிருக்கேன் என்னோட இசை டிரெய்லரை, அஜித் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.